ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்ற ஷாருக்கான், நயன்தாரா கலக்கியிருக்கும் ஹையோடா பாடலின் ஹிந்தி வெர்சனுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து கடந்த 7-ம் தேதி வெளியான படம் “ஜவான்”. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களிலும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் தற்போது 6 நாட்களில் ரூ.621.12 கோடியை வசூலித்து மிரட்டி வருகிறது. தற்போது வரை பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ள இப்படம் வார நாட்களிலும் வசூலில் குறையவில்லை. இந்த படத்தின் ஒவ்வொரு பாடலும் வெளியாகும்போதே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் அற்புதமான நடனத்தில் வெளியான “ஹையோடா” பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜவான் படத்தின் ”ஹையோடா” பாடலின் ஹிந்தி வெர்சனான “செல்லயா” பாடலுக்கு இயக்குநர் அட்லியின் மனைவியான ப்ரியா அட்லியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடனமாடி வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷின் செல்ல நாயுடன் அட்லி இருவரையும் சுற்றி சுற்றி வரும் நிலையில், இருவரும் நடனமாடியுள்ள காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதில் பிரியா அட்லியுடன், கீர்த்தி சுரேஷ் நடனமாட நடுவே நாயை விட்டு அவர்களது நடனத்தை கெடுத்து விடும் அட்லியின் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவிற்கு பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி விஜய் உள்ளிட்ட பலர் கீர்த்தி சுரேஷின் ஜவான் டான்ஸ் வீடியோவை பார்த்து வாவ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.