நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் தமிழ் மொழியின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
லியோ படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ”Keep calm and avoid the battle” என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. அவ்வப்போது வெளிவரும் இதுபோன்ற அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டிருக்கிறது.
https://twitter.com/7screenstudio/status/1704472973900398836
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ஒரு போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கன்னடம் மொழியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் “மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து” என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




