கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கொரோனா காரணமாகவும், தொற்று அதிகரித்து வருவதாலும் அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி உட்பட நிர்வாகி கள் அஞ்சலி செலுத்தினர். மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் கோபாலபுரம், மற்றும் சிஐடி காலனி இல்லங்களிலும் கருணாநிதி படத்துக் கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் மரியாதை

டெல்லியில், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா இல்லத்தில் கருணாநி திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த இடதுசாரி தலைவர்களான பிருந்தா காரத், டி.ராஜா உள்ளிட்டோர் கருணாநிதி உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.