சாதிய வன்கொடுமை செய்ததாக பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்!

பழ.கருப்பையா தன்னை சாதிய வன்கொடுமை செய்ததாக கரு.பழனியப்பன் புகார் அளித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் தற்போது திராவிட இயக்க சிந்தனையாளராக, சமூக பிரச்னைகளுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது உறவினரும் தமிழக தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா தன்னை சாதிய வன்கொடுமை செய்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக, காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட பல்வேறு கட்சியில் பயணித்த பழ. கருப்பையா, கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்து கொண்டதோடு, அக்கட் சி சார்பில் போட்டியிட்டு சென்னை துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பின்னர் திமுக எதிர்ப்பு அரசியல் கருத்துகளை கூறி வருகிறார்.

இந்த சூழலில் பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் சாதிய வன்கொடுமை குற்றம் சாட்டி புகார்  கொடுத்துள்ளார். அதன்படி அவர் தன்னை கடந்த 20 ஆண்டுகளாக கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக குடும்பத்தில் இருந்து தன்னை ஒதுக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.