வெளியானது கார்த்தியின் ஜப்பான் பட ட்ரெய்லர் -இணையத்தில் படு வைரல்!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.…

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

கார்த்தியின் 25வது படம் என்பதால் கார்த்தியுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டு கார்த்தி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினர். இவ்விழாவில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அரங்கில் நுழைந்த நடிகரும், கார்த்தியின் சகோதரருமான சூர்யா, கார்த்தியின் திரைப்பயணம் குறித்தும் ‘ஜப்பான்’ திரைப்படம் குறித்தும் பேசினார்.  இதனிடையே, தற்போது ஜப்பான் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.