காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தார். இச் சம்பவத்தை அடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரம், மருத்துவம், காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்றும், மக்கள் அனைவரும் அச்சம் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
—கோ. சிவசங்கரன்







