ப்ளூ டிக் கணக்கை பறிகொடுத்த முக்கிய அரசியல் பிரபலங்கள்…

மாத சந்தா தொகை செலுத்தி ட்விட்டர் ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் ட்விட்டர் கணக்குகளில் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு என்னும் டிக் மார்க் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா…

மாத சந்தா தொகை செலுத்தி ட்விட்டர் ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் ட்விட்டர் கணக்குகளில் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு என்னும் டிக் மார்க் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க், கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு விரைவில் அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் குறியீடுகள் அகற்றப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல உயர்மட்ட நபர்கள், பல புகழ்பெற்ற பிரபலங்கள் மற்றும் நாட்டின் சில முக்கிய முதலமைச்சர்கள் உட்பட பலர்  ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளிலிருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

கூடுதலாக, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போன்ற பிற அரசியல் பிரமுகர்களும் பாரதிய ஜனதா கட்சி (BJP), ஆம் ஆத்மி கட்சி (AAP), மற்றும் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ப்ளூ டிக்கை இழந்தன.

உககலவில் பார்க்கும்போது, போப் பிரான்சிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக்ரோசாஃப்ட் கார்ப் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் ப்ளூ டிக் இழந்தோர் பட்டியலில் அடங்குவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.