3 மாத குழந்தையை அண்டாவில் வைத்து பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.

கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் சிக்கிய 3 மாத குழந்தையை அண்டாவில் வைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி உடைப்பு…

கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் சிக்கிய 3 மாத குழந்தையை அண்டாவில் வைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குளச்சல் பகுதியில் உள்ள வெள்ளியாக்குளம் கரை உடைந்ததால் சிங்கன்காவு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும், அந்த குடியிருப்பில் என்பவர் வீட்டிற்குள் இடுப்பளவு வெள்ள நீர் புகுந்த நிலையில் அந்த குடும்பத்தினர் 3-மாத இரட்டை கை குழந்தையுடன் வீட்டில் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு துறையினர் அந்த குழந்தைகளை இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரமாக அண்டாவில் வைத்து மீட்டனர் தொடர்ந்து வெள்ளம் புகுந்து வருவதால் வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.