பிரபல நடிகை சௌஜன்யா திடீரென்று உயிரை மாய்த்துக் கொண்டது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல கன்னட நடிகை செளஜன்யா. சில படங்களிலும் கன்னட சீரியல்களிலும் நடித்து வந்தவர் இவர். பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்து வந்த இவர், இன்று காலை தனது அறையில் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடகு மாவட்டம் குஷால்நகரை சேர்ந்த அவர், சினிமா வாய்ப்புக்காக பெங்களூருவில் தங்கியிருந்து நடித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, மன அழுத்தத்தில் இருந்த தாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புக்கு முன் அவர் எழுதிய மூன்று பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் அவர், தனது உயிரிழப்புக்கு யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம் என்றும் இதற்கு தான் மட்டுமே பொறுப்பு என்றும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனது உயிரிழப்பு முடி வுக்காக பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
நடிகை செளஜன்யா உயிரிழப்பு செய்திருப்பது கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








