தள்ளிப் போகிறதா கங்குவா ரிலீஸ்.. – வெளியீட்டுத் தேதி எப்போது?

கங்குவாவின் அதிகாரப்பூர்வ மறுவெளியீட்டுத் தேதி இன்று அல்லது நாளை (செப்.1) அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை…

When is Gangua release?

கங்குவாவின் அதிகாரப்பூர்வ மறுவெளியீட்டுத் தேதி இன்று அல்லது நாளை (செப்.1) அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதன் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அக்.10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”வேட்டையன்’, ‘கங்குவா’ என இரண்டுமே பெரிய படங்கள். ஆகவே இரண்டும் ஒரே நாளில் திரைக்கு வந்தால், குறைவான திரையரங்குகளிலேயே படத்தை வெளியிட முடியும். அதிலும் ‘கங்குவா’வின் பட்ஜெட் மிகப்பெரியது. இரண்டு பாகங்களாக வரவிருக்கிறது. இரண்டுமே பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இரண்டு படங்களுமே வெவ்வேறு தினத்தில் வெளியானால், விநியோகஸ்தர்கள் உள்பட பலருக்கும் லாபகரமானாதாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே கங்குவாவின் ரிலீஸ் தேதியை ஆக.31ஆம் தேதிக்கு மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், கங்குவாவின் அதிகாரப்பூர்வ மறுவெளியீட்டுத் தேதி இன்று அல்லது நாளை (செப்.1) அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.