திமுக-வை விமர்சித்த காமராஜர் – நினைவு கூர்ந்த அமைச்சர் நாசர்

காமராஜர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருபோது விட்டுக் கொடுத்தது கிடையாது என அமைச்சர் ஆவடி.நாசர் தெரிவித்துள்ளார்.   திருவள்ளூர் மாவட்டம் , குமணன்சாவடியில் அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் கல்வித் திருவிழா…

காமராஜர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருபோது விட்டுக் கொடுத்தது கிடையாது என அமைச்சர் ஆவடி.நாசர் தெரிவித்துள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் , குமணன்சாவடியில் அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் கல்வித் திருவிழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.நாசர், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் 1200 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அகில இந்திய நாடார் மகஜான சபை சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், மறைந்தும் மறையாமல் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் காமராஜர் பிறந்த நாளை இன்று நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றார். இன்றைய தினம் இந்தியாவிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய காமராஜரை கொண்டாடி வருகிறோம்.

 

அவரை பெருமைப்படுத்தும் விதமாக சென்னை கடற்கரை சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலே முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது திராவிட முன்னேற்ற கழகம். பெருந்தலைவர் காமராஜர் வழங்கிய தொண்டு பெரிதானது என்ற அவர், காமராஜர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருபோதும் விட்டுக் கொடுத்தது கிடையாது என கூறினார்.

ஆந்திரா அரசு காமராஜரை கைது செய்ய திட்டமிட்டு இருந்தபோது, அந்த செய்தி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரியவந்தது- அப்பொழுது காமராஜரை நீங்கள் ஆந்திராவுக்கு செல்லக்கூடாது என கருணாநிதி சொன்னதை காமராஜரை கேட்காமல் அவர் புறப்பட்டார். பின்னர் அவரை திருத்தணியிள் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

 

அவரை சென்னை கொண்டு வந்து அவரது இல்லத்தில் விட்டு சென்றார்கள், ஏன் என்னை கைது செய்து கொண்டு வந்து என்னுடைய இல்லத்தில் விடுகிறீர்கள், ஒன்றிய ஆட்சி விட இங்கு நடக்கும் திமுக ஆட்சியை கொடுமையாக இருக்கிறது என்று அன்றைய தினம் காமராஜர் கூறினார். பல பிரதமர்களை, கவர்னர்களை உருவாக்கிய ஒரு பெருமை காமராஜரை சேரும். காமராஜர் மறைந்த பிறகு அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருந்தனர்.

 

ஆனால் அப்போதைய திமுக அரசு அவர் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானவர் இல்லை அவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு சொந்தமானவர் என்று கூறி, கிண்டியில் உள்ள தோட்டத்தில் அவரை புதைத்து அவருக்காக அங்கு மணிமண்டபத்தை கட்டினார்கள் என புகழாரம் சூட்டினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.