சென்னையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது துபாய் செல்ல வந்த சென்னையை சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவருடைய டிராலி பை மீது சந்தேகம் கொண்டனர். அதில் ரகசிய அறை வைத்து வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்தனா்.
அவற்றில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து 24 லட்சத்தி 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக அவரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








