கல்வி கண் திறந்த காமராஜர்

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வித்திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். 1953ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் பணியாக, ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.…

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வித்திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

1953ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் பணியாக, ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார். அவரால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்தார்.

முதல் ஐந்தாண்டு ஆட்சியில், 4,267 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, 6,076 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்றிருந்த நிலையை மாற்றி, பிற சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தை கொண்டு வந்ததால், கல்விக்கண் திறந்த காமராஜர் என அழைக்கப்பட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. கல்லூரிகளில் முதல்முறையாக தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. கல்வித்துறையில் காமராஜரின் சீரிய திட்டத்தால், 1957-ல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள், 1962ல் 29000 ஆக உயர்ந்தன. 1955 -ல் 814 ஆக இருந்த உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962ல் 1,996 ஆக உயர்ந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.