முக்கியச் செய்திகள் சினிமா

ஓடிடியில் வெளியானது கமலின் “விக்ரம்”

கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஓடிடியில் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகியது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாதமாகியும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம், கேரளம் மற்றும் வெளிநாடுகள் என உலகம் முழுவதும் வசூலைக் குவித்துள்ளது இத்திரைப்படம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நேற்றைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் ரூ. 442 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விக்ரம் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விக்ரம் படத்தைப் பார்க்க மூன்று பிளான்களை ஹாட் ஸ்டார் தளம் அளித்துள்ளது. ரூ. 499 ப்ளானில் மொபைலில் ஓடிடி தளத்தைக் காணலாம். இதில், விளம்பரங்கள் தோன்றும். ஒரு டிவைசிற்கு மட்டுமே அனுமதி. ஸ்டாண்டர்டு எச்டி தரத்தில் விக்ரம் மற்றும் மற்ற படங்கள், வெப் சீரிஸ், நாடகங்கள் உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம். 899 ரூபாய் பிளானில் எச்டி தரத்தில் 2 டிவைஸ்களில் படத்தைப் பார்க்கலாம். 1499 ரூபாய் பிளானில் 4கே தரத்தில் படத்தை கண்டுகளிக்கலாம். விளம்பரங்கள் தோன்றாது. இந்த மூன்று பிளான்களும் ஓராண்டு வரை செல்லுபடியாகும்.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேற்று இரவு 12 மணிக்கு விக்ரம் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில், இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரது அன்புக்கும் மிக்க நன்றி. இனி நீங்கள் விக்ரம் திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் காணலாம் எனப் பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை

G SaravanaKumar

முதலமைச்சர் ஸ்டாலினுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்திப்பு

Web Editor

‘அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் ’

Arivazhagan Chinnasamy