அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ் | மக்கள் மத்தியில் குவியும் ஆதரவு!

ஜனநாயகக் கட்சியின் பல மூத்த தலைவர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்துக் குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது…

ஜனநாயகக் கட்சியின் பல மூத்த தலைவர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பணிக்காக நிதி திரட்ட தொடங்கியதாகவும் முதல் 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கில் நன்கொடை குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அதன் பின் அவர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அந்த கட்சிக்கு 677.6 கோடி ரூபாய் நன்கொடை குவிந்துள்ளதாகவும் இதற்கு முன் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டபோது மிகக் குறைந்த அளவு தான் நன்கொடை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் நன்கொடை குவிந்திருப்பதை பார்க்கும்போது கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி பல மூத்த தலைவர்கள், தொழில் அதிபர்களின் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக தெரிய வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.