தேர்தல் பரப்புரையின் போது கமல்ஹாசனின் காரை திறக்க முயன்ற மர்மநபர்

மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலஹாசனின் காரை மர்ம நபர் திறக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 2021ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் களம்…

மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலஹாசனின் காரை மர்ம நபர் திறக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 2021ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். இவர் நேற்று(14.03.2021) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொண்ட பரப்புரையின்போது மர்மநபர் ஒருவர் அவரது கார் கண்ணாடியை திறக்க முயன்றதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனின் கார் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை சென்றுக் கொண்டிருந்த வழியிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த நபர் கமல்ஹாசனின் ரசிகர் என்றும் அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிகிகப்பட்டுள்ளது. மேலும் அவர் மநீம உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாக மநீம தரப்பில் கூறப்பட்டுள்ளது. கமலுக்கும் அவரது காருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.