ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததா ‘இந்தியன் 2’ ட்ரெய்லர்?

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியான நிலையில்,  இந்த ட்ரெய்லர் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ரசிகர்கள்  இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.  இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ரகுல் ப்ரீத் சிங்,  ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படத்தின் ‘இந்தியன் – 2’  திரைப்படத்தின் பாரா,  நீலோற்பலம்,  காலண்டர், கதறல்ஸ்,  கம் பேக் இந்தியன்,  சகசக ஆகிய அனைத்து பாடல்களும் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.  அண்மையில்,  ‘இந்தியன் 2’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.  இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை பிரமாண்டமாக அமைந்துள்ளது.  நேற்று மாலை வெளியான இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.  இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன.  குறிப்பாக இந்தியன் 2 திரைப்படத்தில் சேனாபதியின் கதாபத்திரம் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், ட்ரெய்லரில் சேனாபதியின் கதாபத்திரம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.