கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆட்டோவில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை தெற்கு தொகுதியில் நட்சத்திர வேட்பாளர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அத்தொகுதியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை பந்தைய சாலை மற்றும் ராமநாதபுரம் பகுதியில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் உரையாடினார்.
பின்னர் ஆட்டோ மூலம், தான் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு பயணம் செய்தார். கமல்ஹாசன் ஆட்டோவில் பயணிப்பதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டுநர்கள், அவரை நோக்கி கைசயசைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோ கிராப் வழங்கிய கமல், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







