முக்கியச் செய்திகள்சினிமா

இரண்டே நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கிய ‘கல்கி 2898 AD’ திரைப்படம்!

‘கல்கி 2898 AD’ படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவலையும் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன் வில்லனாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் லீடிங் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். அதேபோல், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது கல்கி 2898 AD. இப்படத்திற்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் அடித்து நொறுக்கியது.

அதன்படி, கல்கி படத்திற்கு முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 55 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் நாளில் கண்டிப்பாக 100 கோடி வரை கலெக்ஷன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கல்கி 2898 AD வசூலில் சக்கைப் போடு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் கல்கி 2898 AD படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. முக்கியமாக ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் ஒரு டிக்கெட் விலை 1300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. அப்படியிருந்தும் ரசிகர்கள் கல்கி படம் பார்க்க அதிக ஆர்வம் காட்டினர். முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிசியிலும் ரூ.191.5 கோடி வசூலை வாரி குவித்தது.

இதன் மூலம், பாகுபலி, ஜவான் போன்ற பல படங்களின் முதல் நாள் வசூல் முறியடிக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் இல்லை என்பதால்… இப்படம் 300 கோடியை நெருக்கமா? என கேள்வி எழுந்தது. ஆனால் கிட்ட தட்ட 300 கோடி வசூலை ‘கல்கி’ திரைப்படம் நெருங்கிய சந்தோஷமான தகவலை தயாரிப்பு நிறுவனமான வைஜெந்தி மூவிஸ் அறிவித்துள்ளது.

அதாவது இப்படம் நேற்றைய தினம் ரூ.298.5 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால்… 5 நாட்களில் 600 கோடி வசூலை வாரி குறிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் கல்கி படத்தை பார்த்து விட்டு, இந்திய சினிமாவில் அடுத்த மையில் கல் என இந்த படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தள்ளிப் போகிறதா ராஜமவுலியின் ’ஆர் ஆர் ஆர்’ரிலீஸ்?

Halley Karthik

“நாடு முழுக்க தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை!” வெளியான அதிர்ச்சித் தகவல்!

Web Editor

82% ரயில் பாதைகள் மின்மயமாக்கம்- மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading