பரத் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் காளிதாஸ். ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
பரத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சங்கீதா, இப்படத்தின் ரீ – எண்ட்ரி கொடுக்கிறார்.
இந்த நிலையில், காளிதாஸ் – 2 படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.








