அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதிக்கு சிலை – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி சிலை மீண்டும் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் நீலமேகம், அரசு சார்பாக அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை அமைக்க வேண்டும்…

சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி சிலை மீண்டும் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் நீலமேகம், அரசு சார்பாக அண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, சென்னை அண்ணா சாலையில் கருணாநிதி சிலை மீண்டும் வைக்கப்படும் என தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பெரியார், அண்ணாவின் சிலைகளை போல் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அண்ணா சாலையில் கருணாநிதி சிலை மீண்டும் நிறுவப்படுமா என்பது குறித்து “கருணாநிதிக்கு எப்போது சிலை” என்ற தலைப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி நியூஸ் 7 தமிழ் செய்தித்தொகுப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.