முக்கியச் செய்திகள் உலகம்

தலிபான்கள் மனித உடலை தொங்கவிட்டபடி ஹெலிகாப்டரில் பறந்தார்களா?

தலிபான்கள் மனித உடலை தொங்கவிட்டபடி ஹெலிகாப்டரில் பறக்கவில்லை என ஆப்கன் ஊடகவியலாளர் அளித்த தகவலில் தெரிய வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் உள்நாட்டு அரசு படைகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் கடந்த 2 வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. தலிபான்கள் அரச படைகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதையடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு நேற்றுடன் அங்கிருந்த முழு படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தலிபான்கள் அமெரிக்கா படைகளுக்கு உதவியதற்காக ஒருவரை அமெரிக்காவிற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தொங்கவிட்டபடி பறந்து செல்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், ஆப்கனை சேர்ந்த பத்திரிகையாளர் அளித்த தகவலின் படி தலிபான்கள் யாரையும் ஹெலிகாப்டரில் தொங்கவிட்டபடி பறக்கவில்லை எனவும், அங்கிருக்கும் அரசு அலுவலகம் ஒன்றில் தலிபான்கள் கொடியை பறக்கவிடும் நோக்கில் ஒருவரை விமானத்தில் இருந்து இறக்கியதாகவும் ஆனால், சில காரணங்களால் அவர்களால் கொடியை பறக்க விட முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா!

Niruban Chakkaaravarthi

வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!

Halley karthi

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்

Ezhilarasan