29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள் சினிமா

இந்திய சினிமாவின் தங்கத்தாமரை மகள்; நடிகை கஜோலுக்கு இன்று பிறந்தநாள்…!


ஆண்ட்ரூ

கட்டுரையாளர்

ஒரு புதுமுகம் கொண்ட நடிகையோ நடிகரோ திரையில் வர வேண்டுமென்றால் குறைந்தது மாநிறமாகவும், அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும் என்று ஒரு மாயை பரவி வந்த வேலையில், மாநிறத்தை விட குறைவான நிறம், மெல்லிய உடல் என திரை பிரவேசத்துக்கு எதிரான தகுதிகள் இருப்பினும், திறமை ஒன்றை மட்டுமே வைத்து திரைத்துறைக்குள் வந்து தற்போது இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஒரு ஸ்டாராக விளங்குபவர் தான் நடிகை கஜோல்.

      ஆகஸ்ட் 5 1974 ஆம் ஆண்டு நடிகை தனுஜாவுக்கும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சோமு முகர்ஜிக்கும், முதல் மகளாகப் பிறந்தவர் தான் கஜோல் முகர்ஜி. தங்கையின் பெயர் தனுஷா முகர்ஜி. தந்தை தாய் அத்தைமார்கள் மாமன்மார்கள், பாட்டனார் என அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆக இருந்ததால், இயற்கையாகவே கஜோலுக்குள் திரை ரத்தம் உடலுக்குள்  பாய்ந்தது. கஜோலின் இளமைப் பருவத்திலேயே அவரது பெற்றோர்கள் பிரிந்தனர். இயல்பாகவே தைரியம், அழுத்தம், பிடிவாத குணம் உள்ள கஜோலுக்கு தனது பெற்றோர்களின் பிரிவு பெரிதாக பாதிக்கவில்லை. சிறு வயதிலிருந்தே தாயின் மராட்டிய பழக்கவழக்கங்களையும் தந்தையின் பெங்காலி பாரம்பரியத்தையும் கற்று வாழ்ந்த கஜோல், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பள்ளி படிக்கும் பொழுது பள்ளிப் படிப்பு மட்டும் இன்றி, கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வமாக இருந்த கஜோல், தனது 16 வயதில் 1992-ல் கமல் சாதனா நடிப்பில் கதாநாயகியாக, “பெக்குண்டி” திரைப்படத்தின் மூலமாக இந்திய திரைத்துறையில் அறிமுகமானார் கஜோல். தனது முதல் திரைப்படத்திலேயே, திரை கதையையும் எழுதிய கஜோலுக்கு எதிர் பார்த்ததை விட பெரும் வெற்றியாக அந்த அமைந்தது. பள்ளியின் கோடைக்கால விடுமுறை சமயத்தில் ஹிட்டடித்த அந்த படம், அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றி ஒரு முழுநேர நடிகையாக மாற்றியது.

1995 ஆம் ஆண்டு கஜோல் நடிப்பில் வெளியான 5 படங்களில், ”தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே” திரைப்படம் அந்த வருடம் வெளியான திரைப்படங்களில் நானூறு மில்லியன் வசூல் செய்ததோடு, நாலாவது அதிகமாக வசூல் செய்த படம் எனும் பெருமையை பெற்றது. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கஜோல், தனது திரை பயணத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது மட்டுமின்றி, இன்று வரை கஜோல் ஷாருக்கான் ஜோடி தான் பாலிவுட்டில் ஹிட்டான ஜோடியாக ரசிகர்களால்  கொண்டாடப்படுகின்றனர். இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பிப்ரவரி 20, 2015ம் ஆண்டு இறுதியாக திரையிடப்பட்டு 20 ஆண்டுகள் வெற்றிகரமாக மும்பையில் உள்ள ”மராத்தா மந்திர்” திரையரங்கில் ஓடியது.

வெற்றி படங்களை குவித்த அதே ஆண்டு hulchul, குந்தராஜ் எனும் தோல்வி படங்களிலும் நடித்தார்.  இதன் மூலமாக 1996 ஆம் ஆண்டு பம்பாய் கா பாபு எனும் ஒரு படமே வெளியானது. 14 ஜனவரி 1997 ஆம் ஆண்டு, பிரபு தேவா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில், தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில், தனது நடிப்பு மூலமாக மின்சாரமாக பயந்தார் கஜோல். இந்தி படங்களில் மட்டுமே கஜோலை பார்த்த ரசிகர்களுக்கு, கஜோலின் தமிழ் உச்சரிப்பை பார்க்கையில் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

1994 ஆம் ஆண்டு, நடிகர் அஜய் தேவ்கனை காதலிக்க ஆரம்பித்து, 1998 வரை சில தோல்வி படங்களிலும் பல வெற்றி படங்களில் நடித்த கஜோல், பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு, அஜய் தேவ்கன் இல்லத்தில் மகாராஷ்டிர முறைப்படி திருமணம் செய்து கொண்டார் கஜோல். திருமணத்திற்குப் பின்னர் மும்பை அருகே உள்ள ஜூஹூவில் தங்களது முன்னோர்களின் வீட்டுக்கு சென்று திரை வாழ்க்கையிலிருந்து சிறிது விலகி இருந்தார். நான்கு வருடம் கழித்து 2003 ஆம் ஆண்டு ”நைசா” என்னும் மகளையும் 2010 ஆம் ஆண்டு ”யுக்” எனும் மகனையும் பெற்றெடுத்தார்.

திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாது, தனது கணவரின் அஜய் தேவகன் ஃபிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் பார்வை அதிகாரிய்யாகவும், தொலைக்காட்சி தொடர்களில் ஜட்ஜாகவும் இருந்துள்ளார். வாழ்க்கை மற்றும் சினிமா சார்ந்த சில புத்தகங்களை எழுதிய கஜோல், நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை சரித்திரமான SRIDEVI: THE ETERNAL SCREEN GODDESS எனும் புத்தகத்தையும் எழுதி பலதரப்பு மக்களிடமிருந்தும் பாராட்டுக்களையும் பெற்றார். திரை வாழ்க்கையில் ஜொலிப்பது மட்டுமல்லாது, நிஜவாழ்விலும் கைம்பெண்கள் மற்றும் அனாதை குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நிஜ வாழ்விலும் ஜொலிக்கிறார் கஜோல். இதுவரை 6 FILM FARE விருதுகள், 5 SCREEN AWARD விருதுகள் என மொத்தம் 23 விருதுகளை குவித்த கஜோல் 2011 ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருதினையும் பெற்றார்.

கஜோலை மீண்டும் பெரிய திரையில் அதுவும் தமிழ் திரைப்படங்களில் பார்க்க மாட்டோமா என ரசிகர்கள் காத்திருந்த வேளையில் வெளியானது தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கஜோல் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2. வேலையில்லா பட்டதாரி 1 போல வசூலிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை இந்த திரைப்படம் பெறாத போதிலும், தனுஷை தவிர்த்து கஜோலுக்காகவே தமிழ்நாட்டின் பல திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. இந்த திரைப்படத்தில் தனுஷின் வளர்ச்சியை தடுக்கும் வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் கதாநாயகியாகவே மிளிர்ந்தார் கஜோல். ஹிந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கும் கஜோல் எப்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தற்பொழுது பெரிதாக திரையில் வராத கஜோல், 80ஸ் மட்டுமல்லாமல் இன்றைய 2K கிட்ஸ் மனதிலும் ஒரு மின்சார கதாநாயகியாகவே திகழும் கஜோல், தனது திரை பயணம் உட்பட மேலும் பல பணிகளில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading