தமிழகம் செய்திகள்

மின் கம்பத்தை அகற்றாமல் சாலை விரிவாக்கம் – உத்திரமேரூரில் அரங்கேறிய அவலம்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பங்களை அகற்றாமல் அதனை சுற்றியே விரிவாக்கம் செய்தனர்.

உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அதனை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. உத்திரமேரூர் அங்காளம்மன் கோவில் பகுதியிலுள்ள சாலைப்பகுதியில் விரிவாக்கம் செய்ய பல இடர்பாடுகள் இருந்ததால் சாலையின் இருபுறமும் இருந்த 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல் அதனை சுற்றி தடுப்பு வேலிகளை அமைத்து சாலையை விரிவாக்கம் செய்துள்ளனர்.

இதனைபோன்றே பழமையான புளியமரங்களை சுற்றியும் வேலிகள் அமைத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையீட்டு
மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறபடுத்தி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அரசிற்கு பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொது சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு உகந்தது அல்ல: முதலமைச்சர்

G SaravanaKumar

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு; அரசாணை வெளியீடு

Arivazhagan Chinnasamy

குடியரசு தின அணிவகுப்பில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையுடன் வந்த அலங்கார ஊர்தி!

Web Editor