நடிகர் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.
2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜுவாலா குட்டா. 2011ம் ஆண்டு பேட்மிண்டனுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கல பதக்கத்தை வென்றார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் இவரும் நடிகர் விஷ்ணு விஷாலும் காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்தே பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ’ எங்கள் குடும்பத்தின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்துகொள்ள உள்ளோம். இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் மீது நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், இந்த புதிய பயணத்தைத் தொடங்க உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்குத் தேவை’ என்று ட்விட்டரில் இருவரும் பதிவிட்டுள்ளார்.
ஜீவா, ராட்சன், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, மாவீரன் கிட்டு, நீர்ப்பறவை, காடன் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். ஜீவா, முண்டாசுப்பட்டி, மாவீரன் கிட்டு, நீர்பறவை போன்ற தனித்துவமான திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.