12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும் வங்காள தேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதி போட்டிக்கு முன்னேறின.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரரான சமீர் மின்ஹாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 113 பந்துகளில் 172 ரன்கள் விளாசிய அவர் தீபேஷ் தேவேந்திரன் பந்தில் கேட் ஆனார். அதே போல் மற்றொரு வீரரான அஹமது ஹுசைனும் 72 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளையும், ஹெனில் பேட், கிலன் பட்டேல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.







