காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் விலகியுள்ளார்.
ஐந்துபோட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. அடுத்தடுத்தப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பகலிரவு போட்டியான இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டது. முதல் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான சிட்னிக்கு சென்றுவிட்டார். காயத்தில் இருந்து அவர் குணமடையாததால் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் அந்தப் போட்டியில் ஆடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் அல்லது மைக்கேல் நேசர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.