முக்கியச் செய்திகள் இந்தியா

மிஸ் யுனிவர்ஸ் ஆனார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து

இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) படத்தை வென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 70 வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி, இஸ்ரேலில் உள்ள எய்லாட் நகரில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில், பராகுவே-வை சேர்ந்த நதியா பெரேரியா (Nadia Ferreira ) தென்னாப்பிரிக்காவில் லாலேலா மஸ்வானே (Lalela Mswane) இந்தியாவின் ஹர்னாஸ் சாந்தி இடம்பெற்றனர். இதில் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.

இறுதிச்சுற்றில், இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை சமாளிப்பது எப்படி என்றும், தாங்கள் கூறும் அறிவுரை என்ன என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னம்பிக்கை இல்லாததே இன்றைய அழுத்தங்களுக்கான காரணம் எனவும், தனித்துவமானவர் என்பதை அறிவதே, ஒவ்வொருவரையும் அழகாக்குகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவரவர் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டுமென, துணிச்சலாக தெரிவித்தார்.

அவருக்கு, முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி, ஆண்ட்ரியா மெசாவால், மகுடம் சூட்டினார். ஹர்னாஸ் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டவர். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றிருக்கிறார்.

இந்தியா சார்பில், சுஷ்மிதா சென் 1994 ஆம் ஆண்டும், லாரா தத்தா 2000-ம் ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது, இந்தியப் பெண் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!

Ezhilarasan

வாக்களித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

இரவு நேர ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் : போலீசாருக்கு காவல் ஆணையர் அறிவுரை!

Ezhilarasan