ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சு ; இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கோண்டுள்ளது. இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்ட மெல்பெர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் இந்திய அணி தடுமாறியது. இந்திய அணியில் அதிகபட்சமாக அதிரடியாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் விளாசினார். ஹர்ஷித் ராணா 35 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில்  ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.