பாலிவுட்டில் ஜான் கொக்கேன்: அஜித்குமார் சரியாக கணித்ததாக பேட்டி!

அஜித்குமார் கணிதத்தை போல பாலிவுட்டில் களமிறங்கியள்ளதாக நடிகர் ஜான் கொக்கேன் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஜான் கொக்கேன் 2006 இல் தனது முதல் படமான களபத்தில் நடித்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்…

அஜித்குமார் கணிதத்தை போல பாலிவுட்டில் களமிறங்கியள்ளதாக நடிகர் ஜான் கொக்கேன் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த ஜான் கொக்கேன் 2006 இல் தனது முதல் படமான களபத்தில் நடித்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். 2010 ஆம் ஆண்டில் , பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான புனித் ராஜ்குமாரால் கன்னடத் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் .
அந்தக் காலகட்டத்தில், அவர் எவடு (2014), பாகுபலி: தி பிகினிங் [4] (2015) மற்றும் கேஜிஎஃப் திரைப்படத் தொடர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பா.ரஞ்சித்தின் சர்ப்பட்டா பரம்பரையில் குத்துச்சண்டை வீரர் வேம்புலியாக தோன்றினார். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த துணிவு படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான் கொக்கேன், தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.

இயக்குநர் பாவ் துலியா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய வெப் சீரியஸ் ‘தி ப்ரிலான்சரில் (The Freelancer) என்ற திரைப்படத்தில்  உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இது குறித்து ஜான் கொக்கேன் கூறியுள்ளதாவது :

‘துணிவு படப்பிடிப்பில் நான் பாலிவுட்டில் நடிப்பேன் என்று அஜித்குமார் கணித்திருந்தார். அவர் சொன்னது போலவே இந்த இந்தி வெப் சீரிஸில் துணிவு முடிந்த உடனேயே கையெழுத்திட்டேன். அவர் கூறியது போல நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனுபம் கெர் போன்ற மூத்த பாலிவுட் நடிகர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் காம்பினேஷன் காட்சிகளும் உள்ளதாக ஜான் கொக்கேன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.