உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் செஸ் போட்டி நடத்தப்பட்டது-உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் செஸ் போட்டி நடத்தப்பட்டது என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். திமுக இளைஞர் அணி உறுப்பினர் உரிமை அட்டை வழங்குதல் & திராவிடமாடல் பயிற்சிப் பாசறை…

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் செஸ் போட்டி நடத்தப்பட்டது என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணி உறுப்பினர் உரிமை அட்டை வழங்குதல் & திராவிடமாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. மற்ற நாடுகளில் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய மாத கணக்கில் ஆகும். ஆனால் குறைந்த நாட்க்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

இதுவரை 100 தொகுதியில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் கூட்டம் சேரவில்லை என்றாலும் குறைந்தது 100 நபர்களை கொண்டே பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்துங்கள். யாரையும் வற்புறுத்தி அழைக்காமல் விருப்பம் உள்ளவர்களை கொண்டு பயிற்சி பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள்.

தற்போது இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள் மட்டும் இல்லாமல் தற்போது இருக்கக்கூடிய முதலமைச்சரும் இளைஞர் அணையில் இருந்து வந்தவரே நன்றாக உழைப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.