#Jharkhand | ஹேமந்த் சோரன் தேர்தல் வாக்குறுதியாக இலவச கஃபன்கள் வழங்குவதாக தெரிவித்தாரா? உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் இறந்தவர்களுக்கு இலவச கஃபன்கள் வழங்குவதாக காட்டும் வகையில் வீடியோ ஒன்றை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த…

#Jharkhand | Did Hemant Soren promise to provide free shrouds as a 2024 election promise? What is the truth?

This news Fact Checked by ‘Newsmeter’

ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் இறந்தவர்களுக்கு இலவச கஃபன்கள் வழங்குவதாக காட்டும் வகையில் வீடியோ ஒன்றை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று (நவ. 13) சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கவுள்ளது. 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நவ. 20-ம் தேதி முடிவடைந்து, நவ. 23-ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவச கஃபன்கள் (சடலம் மூட பயன்படுத்தும் சாதாரண துணி) வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. 2024 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கஃபன்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “முதலமைச்சர் ஜார்கண்ட் மக்களுக்கு இலவச கஃபன்கள் வழங்குவார். ஆஹா, புதிய இலவசங்களுடன் முன்னேறும் போட்டியில் முதலமைச்சர், இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள பொருளைப் புரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

உண்மை சரிபார்ப்பு:

இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், 2021-ம் ஆண்டு கோவிட்-19 2ம் அலையின் போது அனைவருக்கும் இலவச கஃபன்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்திருந்ததும், தற்போது பரவிவரும் கூற்று தவறானது என்றும் நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.

வீடியோவின் கீஃப்ரேம்களின் தலைகீழ் படத் தேடலை மேற்கொண்டபோது, ​​அதை  நவ்பாரத் டைம்ஸ் மே 25, 2021 அன்று வெளியிட்டதைக் காணமுடிந்தது. அந்த 4:10 நிமிட வீடியோவின் முதல் 17 வினாடிகளில் வைரல் கிளிப் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டில் கோவிட் -19 லாக்டவுனின் 2ம் கட்டத்தின் போது அவற்றை வாங்குவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்ய அனைவருக்கும் இலவச கஃபன்களை என ஹேமந்த் சோரன் அறிவித்ததாக அந்த செய்தியில் கூறப்படுகிறது.

அதேபோல் மே 25, 2021 அன்று ஜீ நியூஸ் வெளியிட்டிருந்த வைரல் கிளிப்பை நாங்கள் கண்டறிந்தோம். கோவிட்-19 நோயால் இறக்கும் நோயாளிகளுக்கு இலவச கஃபன்கள் விநியோகிப்பதாக ஜார்கண்ட் அரசாங்கம் அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

மே 25, 2021 தேதியிட்ட ஆஜ் தக் மற்றும் ஜன்சட்டா செய்தி அறிக்கைகளும் கண்டறியப்பட்டது. மேலும் இந்த செய்தி தொகுப்புகளிலும் கோவிர் – 19 தொடர்பான ஹேமந்த் சோரனின் அறிவிப்பு வெளியாகியிருந்தன.

முடிவு:

எனவே, 2024 ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக சோரன் இலவச கஃபன்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என நிருபணம் செய்யப்பட்டது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.