ஜெயம் ரவியின் #GENIE திரைப்படம் – பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு!

ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜீனி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’. ஜெயம் ரவி,…

Jayam Ravi's #GENIE - New Poster Released on Birthday!

ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜீனி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்பொழுது ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் அலாவுதீன் பூதத்தைப்போலவும் , கல்யாணி பிரியதர்சன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தேவதை வேடத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அலாவுதின் கம்பலத்தில் வானத்தில் பறந்துக் கொண்டு இருக்குமாறு போஸ்டர் வடிவமைத்து இருந்தனர்.

அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்து இருக்கிறது. கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



இப்படம் ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.