ஜவான் Vs ஜெயிலர்: ஜவான் ரிலீஸ் நாளில் ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்!

ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வரும் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், அதே நாளில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர்…

ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வரும் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், அதே நாளில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் சுமார் ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலரின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் ஆகிய இருவருக்கும் கலாநிதி மாறன் நேற்று சொகுசு கார்களை பரிசளித்தார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜெயிலர் வெளியாகிறது.

இதே நாளில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகிறது. இரு திரையுலக ஜாம்பான்வான்கள் நடித்த இரு வேறு படம் ஒரே நாளில் திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.