ஜவான் வசூல் சாதனை! 5 நாட்களில் இத்தனை கோடி கலெக்ஷனா?

ஜவான் திரைப்படம் நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 531 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு…

ஜவான் திரைப்படம் நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 531 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.

இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன.

இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஜவான் திரைப்படம் நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 531 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சாதனையை மிக வேகமாக அடைந்த ஹிந்திப் படம் என்ற பெருமையையும் ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.

https://twitter.com/RedChilliesEnt/status/1701543058100109643

தற்போது 5வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு அமெரிக்காவிலும் Barbie மற்றும் OppenHeimer ஆகிய திரைப்படங்கள் வார இறுதி நாட்களில் வசூலித்ததை காட்டிலும் அதிகமாக வசூலித்து ஜவான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.