நிறைய மஜா தருணங்களுடன் வெளியானது ‘ஜவான்’ ட்ரெய்லர் -இணையத்தில் வைரல்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்த…

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் அனிருத் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வரும் செப்டம்பர் 7-ந் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.