இன்ஸ்டாவில் நயன்தாரா: பரபரப்பாக பாலோ செய்யும் ரசிகர்கள்!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் “சந்திரமுகி படத்தில் நயன்தாரா இணைந்து நடித்தார். அதனைத்தொடந்து அவர் நடித்த…

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் “சந்திரமுகி படத்தில் நயன்தாரா இணைந்து நடித்தார். அதனைத்தொடந்து அவர் நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார்.

நாயகர்களுக்கு சமமாக பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள் ப்ளாக்பஸ்டர் படங்களாக வெற்றி பெற்றன. கதாநாயகர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி மார்க்கெட் உருவானது. அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் நயன்தாரா.

தற்போது பாலிவுட் கிங்கான ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தனது இரு குழந்தைகளை நயன்தாரா தூக்கி கொண்டு வருகிறார். பின்னணியில் ஜெயிலர் திரைப்படத்தின் அலப்பறை கௌப்புறோம் பாடல் ஒலிக்கும் முதல் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.   உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.