ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25 ஆவது உருவாகி இருக்கும் படம் ஜப்பான். ஜப்பான் படத்தின் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாஇன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, ராஜூ முருகன் , ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, நடிகர் பொண்வண்ணன், சத்யராஜ் , சிபி சத்யராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன் மேலும் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “மணிரத்னம் படத்தில் துணை இயக்குநராக செப்.2003இல் சேர்ந்தேன். தற்போது 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியில் என்னுடன் பயணித்த பல இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.
மிகவும் சந்தோஷமான தருணம் இது. நான் சறுக்கிய படங்களின்போது உங்களின் விமர்சனம் மூலம் நான் கற்றுக்கொண்டு முன்னேறியுள்ளேன். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக்க நன்றி. எப்போதும்போல எனக்கு ஆதரவு தெரிவியுங்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.







