முக்கியச் செய்திகள்சினிமா

அதிதி உடனான காதலை உறுதிப்படுத்திய நடிகர் சித்தார்த் – வைரலாகும் இன்ஸ்டா கவிதை!

நடிகை அதிதி ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.

பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி,ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தே கலந்துகொண்டார்கள். மேலும்  இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்வது பாடலிற்கு சேர்ந்து நடனமாடுவது என ரசிகர்களை குழப்பத்தில் வைத்திருந்தார்கள்

இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் அதிதி  தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். சித்தார்த்தை தான் காதலிக்கிறாரா என்கிற கேள்விக்கு அவர் வாயில் விரல் வைத்து சைலன்ஸ் என்பதைப் போல் சிரித்துக் கொண்டே பதிலளித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல்வேறு கிசுகிசுக்களுக்குப் பிறகு நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகிய இருவரும் காதலித்து வரும் தகவல் தற்போது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இன்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி தன் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

இந்தப் பதிவில் அதிதியின் தோளில் தான் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவரை பார்ட்னர் என்று அழைத்துள்ளார். மேலும் ஆங்கிலத்தில் கவிதை எழுதி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் சித்தார்த். இதற்கு பதிலாக கமெண்ட் செய்த அதிதி “ நீ இவ்வளவு அழகாக கவிதை எழுதுவாய் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே “ என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

”அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருக்கிறது!” சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Web Editor

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!

Halley Karthik

வேதாரண்யத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

Arivazhagan Chinnasamy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading