ஜப்பானில் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து கடலேரா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2011ல் ஏற்பட்ட நிலநடுக்கதை போலவே, ஜப்பானில் நேற்று அதிகாலை வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த…

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து கடலேரா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2011ல் ஏற்பட்ட நிலநடுக்கதை போலவே, ஜப்பானில் நேற்று அதிகாலை வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் டோக்கியோவிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்ததால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.