கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு – ரஜினியை பார்க்க படையெடுத்த மக்கள்

கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.   இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த…

கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

 

இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடலூர் அருகே உள்ள அழகிய நத்தம் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது கடலூரை சுற்றி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ரஜினியை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதோடு, தகுந்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஏற்கனவே இதே பகுதியில் தான் படையப்பா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது கூட்டம் கூடியது என்பதும் அதன் பிறகு தற்போது இங்கே ரஜினிகாந்த் படத்தின் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.