நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன்ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று காலை வெளியிட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயலர் படத்திற்கு ரசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், நெல்சனுடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் டிவிட்டரில் அறிவித்துள்ளது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. படையப்பா படத்திற்கு பிறகு ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்







