17 மொழிகளில் வெளியாகும் ’ஜகமே தந்திரம்’!

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். ’ரகிட ரகிட ரகிட’, ’என்னை மட்டும் லவ்யூ பன்னும் புச்சி’…

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். ’ரகிட ரகிட ரகிட’, ’என்னை மட்டும் லவ்யூ பன்னும் புச்சி’ பாடல்கள் வெளியாகிப் பெறும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியாகும் இத்திரைப்படத்தை திரையங்குகளில் காண ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ரசிகர்களுக்குச் சிறிது ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் ஜீன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் 17 மொழிகளில் டப் செய்து வெளியாக உள்ளது. 17 மொழிகளில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.