கட்டாய ராணுவப் பயிற்சிக்காகச் சென்றுள்ள ஜே-ஹோப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“ஐ லவ் யூ ஆர்மி. பத்திரமாகத் திரும்பி வருவேன்!” என தனது ரசிகர்களுக்குச் செய்தியைத் தெரிவித்து ராணுவப் பயிற்சிக்காகச் சென்றார். தென்கொரியச் சட்டவிதிகளின்படி, அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று பணியாற்ற வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், 18-28 வயதுடைய அனைத்து ஆண்களும் சுமார் இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ஆனால் BTS உறுப்பினர்களும் 30 வயது வரை தங்கள் ராணுவ சேவையைத் தொடங்குவதைத் தள்ளி வைக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி BTSன் மூத்த உறுப்பினர் ஜின், கடந்த டிசம்பர் மாதம் ராணுவப் பயிற்சிக்காகச் சென்றார். இந்நிலையில், BTS ராப்பரும் முன்னணி நடனக் கலைஞருமான ஜே-ஹோப், தனது கட்டாய ராணுவப் பயிற்சிக்காகச் சென்றதை அடுத்து அவரின் ராணுவ பங்களிப்பு சிறப்பாக அமைய வேண்டும் எனவும், பத்திரமாகப் பயிற்சி முடித்து திரும்பவும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜே-ஹோப் முகாமில் இருந்து அவரது சமீபத்திய இரண்டு படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அங்கு ஹோப் துப்பாக்கியுடன் போஸ் கொடுப்பதை நாம் காணலாம்.