வெங்கடேஷ், திரிபாதி விளாசல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில், அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும்…

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில், அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டிகாக் 56 ரன்களும், ரோகித் சர்மா 33 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தனர். தொடர்ந்து வீரர்கள் ரன் குவிக்க தவறியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே அந்த எணி எடுத்தது.

156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீர்ர்கள் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி எதிரணியினருக்கு மிரட்டல் விடுத்தனர். ஷுப்மான் கில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .தொடர்ந்து களமிறங் கிய ராகுல் திரிபாதியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து, 53 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி இறுதிவரை ஆட்டமிழக் காமல் 74 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்திற்கு கொல் கத்தா அணி முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.