நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கு பயன்படாத பட்ஜெட் என ஜி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது..
பட்ஜெட்டில் உள்ள ஓரிரண்டு அறிவிப்புகள் தேர்தலுக்காக பாஜக அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது வளர்ச்சிக்கு பயன்படாத பட்ஜெட். நடுத்தர ஏழை எளிய மக்களுக்கு உதவாத பட்ஜெட்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது.
நடப்பு பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் தொடர்பான அறிவிப்பு இல்லாதது தமிழ்நாட்டிற்கு செய்துள்ள துரோகம். அதேபோல இந்திய நாட்டின் நெருக்கடியை மீட்டெடுக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படல்லை.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் நிதியை குறைத்துள்ளனர்.
– யாழன்







