உங்களால் தான் நான்- 13 வருட திரை பயணம் குறித்து நடிகை சமந்தாவின் உருக்கமான டிவிட்

உங்களால் தான் நான். என தனது 13 வருட திரை பயணத்தைக் குறித்து டிவிட் ஒன்றை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய…

உங்களால் தான் நான். என தனது 13 வருட திரை பயணத்தைக் குறித்து டிவிட் ஒன்றை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களைத் தன்வசம் ஈர்த்தவர்.

தமிழில் வெலியான ‘வின்னைத்தாண்டி வருவாயா’ தெலுங்கில் ‘ஏ மாய சேஷாவே’ எனும் பெயரில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் தான் சமந்தா முதன்முறையாக நடித்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் பலரும் நடிகை சமந்தாவிற்கு பலரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

அண்மை செய்திகள்: டீ விற்றால் இவ்வளவு லாபமா? – பேசாம டீ கடை ஆரம்பிக்கலாமா ? 

சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தற்போது தனது 13 வருட திரை பயணத்தைக் குறித்து டிவிட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் உங்களுடைய அன்பை புரிந்து கொள்கிறேன். இதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதும், நான் என்னவாக இருக்கிறேனோ அது உங்களால் தான். 13 ஆண்டுகள் ஆகிறது. நாம் இப்போதுதான் தொடங்குகிறோம். என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த டிவிட்டை பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.