புலி படத்திற்கு பிறகு நீங்கள் தான் என்னை வீட்டிற்கு அனுப்பினீர்கள் – நடிகர் சுதீப்

தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு, புலி படத்தை பார்த்த பிறகு நீங்கள் தான் தன்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள் என நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.   விக்ராந்த் ரோணா திரைப்படத்தின்…

தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு, புலி படத்தை பார்த்த பிறகு நீங்கள் தான் தன்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள் என நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

 

விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீத்தா அசோக் உள்ளிட்ட படகுழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கிச்சா சுதீப், தமிழ் நாட்டில் நான் எப்போது வந்தாலும் எனக்கு நிறைய மரியாதை கொடுத்து என்னுடைய வேலையை பார்த்து ரசிக்கிறார்கள் அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 

எல்லா மொழி படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும். சினிமா என்பது ஒரு கதை அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பது தான் எனது கருத்து. நிச்சயமாக இந்த படம் நல்ல படமாக இருக்கும். காசு இருக்கு என்பதற்காக ஒரு பெரிய படம் பண்ணலாம் என்று இதை எடுக்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது. இதை எல்லாரும் பார்க்க வேண்டும் என்று தான் இதை எடுத்துள்ளோம்.

 

தற்போது வரை இயக்குனர் இந்த படத்திற்காக வேலை செய்து வருகிறார். 3-டியில் வேலை செய்வதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் வருமானத்தை பொறுத்து வெற்றி அமையாது. மேலும் மை டியர் குட்டி சாத்தான் கொடுத்த படத்தை வேறு எந்த படமும் கொடுக்க முடியாது. அதை எங்களால் மாற்ற முடியாது என்றார்.


தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்து பேசிய சுதீப், தான் ஈ படத்திற்கு பிறகு ஹீரோவா இல்லை வில்லனா என்று தெரியவில்லை. உங்களை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என பலர் தெரிவித்தனர். அதனால் தான் தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. மேலும் புலி படத்தை பார்த்து விட்டு நீங்கள் தானே என்னை வீட்டிற்கு அனுப்பினிர்கள் என்று நகைச்சுவையாக பேசினார்.

 

குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அது விக்ராந்த் ரோணா படத்தில் உள்ளது. படங்களில் அதிக அளவில் வைலன்ஸ் இருப்பதை எங்கள் படத்தில் நாங்கள் குறைத்து கொள்வோம். மற்ற நடிகர்கள் படங்களை பற்றி நான் சொல்ல முடியாது. ராஜமவுலி மட்டும் அல்ல அனைத்து நல்ல இயக்குனர் உடன் பணியாற்ற எனக்கு ஆசை உள்ளது என சுதீப் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.