பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைக்க 4 வருடங்கள் தேவைப்பட்டது -ஏ.ஆர்.ரகுமான்

பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைக்க 3-4 வருடங்கள் தேவைப்பட்டது என PS2 Anthem வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டு திடலில் இயக்குநர்…

பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைக்க 3-4 வருடங்கள் தேவைப்பட்டது என PS2 Anthem வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டு திடலில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படத்தின் முன்னோட்டமாகப் பொன்னியின் செல்வன் 2 Anthem பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி,விக்ரம் ஜெயராம், நடிகை திரிஷா, ஐஸ்வர்யா
லட்சுமி படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பங்கேற்றனர். அண்ணா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடல்
வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களையும்
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த உற்சாக அனுபவங்களையும் நடிகர்கள் இந்த பிரம்மாண்ட
நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய இசையமைப்பாளர் எ.ஆர்.ரகுமான், பொன்னியின் செல்வன் ஆல்பம் உருவாக்க 3-4 வருடங்கள் ஆனது. நான் என் வாழ்க்கையில் கல்லூரிக்குச் சென்றதில்லை. அதனால் கல்லூரி விழாக்களுக்காக அழைப்பு வந்தால் சந்தோஷமாக வருவேன். மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.