முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது “சூர்யா 42” டைட்டில் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் “சூர்யா 42” படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில்,சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.  இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது “சூர்யா 42” படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.  அந்தவகையில் இந்த படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.  10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைது

Arivazhagan Chinnasamy

2023ல் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல் வெளியீடு

Web Editor

பிரதமருக்கு தமிழில் கடிதம் எழுதி நன்றி தெரிவித்த மதுரையை சேர்ந்த பெண் – ட்விட்டரில் பகிர்ந்த மோடி

Web Editor